Breaking News, Politics, State

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு!

Photo of author

By Vijay

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு!

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டபோவதாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையம் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை, 3700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுலின் இரண்டு வருட தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பதவியை இழக்க செய்து, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து அவர் செல்லும் அணைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம். என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை இவ்வாறு கூறி இருப்பது தமிழக அரசியலில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!