ஜெயலலிதாவிற்கு எதிரான வருமான வரி வழக்கு! தீபா மற்றும் தீபக்கிற்கு ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்!

0
151

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 1990 மற்றும் 91 நிதியாண்டில் இருந்து 2011 மற்றும் 12 உள்ளிட்ட நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய செல்வ வரி பாக்கியாக 10.12 கோடி நிலுவையில் இருப்பதாக வருமானவரித் துறை சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. இதை தவிர வருமான வரி பாக்கி இருக்கிறது இதற்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் இல்லம், உள்ளிட்ட 4 சொத்துக்களை வருமானவரித்துறை ஏற்கனவே முடக்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், செல்வ வரி மற்றும் வருமான வரி குறித்து கணக்கு விவரங்களை ஜெயலலிதா வருடம்தோறும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்று வருமான வரித்துறை கடந்த 1997ஆம் வருடம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை எதிர்க்கும் விதமாக ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஜெயலலிதாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பாக கடந்த 2008ஆம் வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் எல்லாவற்றையும் விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக், உள்ளிட்டோர் முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது அந்த சமயத்தில் வருமானவரித் துறை சார்பாக வழக்கறிஞர் கார்த்திக் ரங்கநாதன் ஆஜராகி ஜெயலலிதா செலுத்த வேண்டிய செல்வ வரி மற்றும் வருமான வரி நிலுவை குறித்த விவரங்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தற்சமயம் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இந்த வழக்கில் அவருடைய சட்டபூர்வமான வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரை எதிர் மனுதாரராக இணைக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உள்ளார்கள்.

Previous articleஆளுங்கட்சியை கண்டித்து 9ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! அதிமுக தலைமை கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு!
Next articleவெளிநாடுகளிலிருந்து வந்த 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை! அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!