தீபாவளியை முன்னிட்டு அதிரடி சாதனை படைத்த தமிழகம்! எதில் தெரியுமா?

0
148

தமிழக அரசு நிதி வருவாயை அதிகரித்து தருவது டாஸ்மாக் கடைகள் தான் அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு மிகப்பெரிய நிதி வருவாயை கொட்டி கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை நாளன்று சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும்.

இந்த சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 3 தினங்களில் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த 22 ஆம் தேதி சென்னையில் 38.64 கோடி திருச்சி, ரூபாய் 41.36 கோடி சேலம், ரூபாய் 40.82 கோடி மதுரை, 45.26 கோடி கோவை, ரூபாய் 39.34 கோடி என்று ஒட்டுமொத்தமாக 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

கடந்த 23ஆம் தேதி சென்னையில் 51. 52 கோடி திருச்சியில் 50.56 கோடி, சேலத்தில் 52.36 கோடி, மதுரையில் 55.78 கோடி, கோவையில் 48.47 கோடி என்று ஒட்டுமொத்தமாக 258.79 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் தீபாவளி தனமான நேற்றைய தினம் சென்னையில் 48.80 கோடி திருச்சியில் 47.78 கோடி, சேலத்தில் 49.21 கோடி, மதுரையில் 82.87 கோடி, கோவையில் 45.42 கோடி என்று ஒட்டுமொத்தமாக 244.08 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

மொத்தமாக பார்க்கும் போது 3 தினங்களில் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 153 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இலக்காக 600 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக 108 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!
Next articleபிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்!