அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!

0
94

மருதுபாண்டியரின் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருக்கின்ற மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தவர், பன்னீர்செல்வம் விளக்கம் அளித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரே இதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இல்லாவிடில் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரை சந்திப்பதில் எந்த விதமான தவறும் இல்லை என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி கோபத்துடன் நடந்து கொள்கிறார். ஒரு முதலமைச்சராக இருந்தவர் இதுபோல நடந்து கொள்வது சரியல்ல. எங்களுடைய வயதுக்கு நாங்களே கோபப்படுவதில்லை அவர் கோபபடுகிறார். ஒரு காட்டுமிராண்டியை போல நடந்து கொள்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அறிக்கை என்பது ஒரு அரசியல்வாதியின் அறிக்கையை போல இருக்கிறது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தமிழகத்தில் இருக்கின்ற எல்லோரும் சொல்கிறார்கள். எங்களுடைய சித்தியை பாதுகாப்பதற்காக நான் இதனை தெரிவிக்கவில்லை. மூத்த பத்திரிக்கையாளர், பத்திரிகைகள், பொதுவானவர்கள் அரசியலுக்கு அப்பால் பட்டவர்கள், ஏன் எங்களுக்கு எதிரானவர்கள் கூட இந்த அறிக்கையை உண்மை தன்மையற்றது என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை மிகவும் தவறானது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோரின் மரியாதையை குலைக்கும் விதத்தில் இருக்கிறது. vip அந்தஸ்தில் இருப்பவர்கள் இனிவரும் காலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பயப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதோட தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பளத்திற்கு யார் யாரெல்லாம் காரணம் யாரெல்லாம் இதற்கு அனுமதி வழங்கினார்கள் என்பதைப் பார்த்து அது யாராக இருந்தாலும் அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.