தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Rupa

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.அந்தவகையில் நாட்டில் படுக்கைகள் இன்றியும் ஆக்ஸிஜன் இன்றியும் பெருமளவு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த சூழலில் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றி அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும்.

அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் கலக்கும் பெண்களின் சாக்லெட் பாய் என்று அழைக்கப்படும் மாதவன் வீட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு பிரபல பாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.அதன்பின் அவர் கொரோனா தொற்று குணமாகி மால்தீவிற்கு தனது காதலனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.தற்போது அல்லு அர்ஜுனுக்கும் கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் தங்களின் வீட்டினுள்ளே தனிமனை படுத்திக்கொண்டு வருகின்றனர்.

அதனையடுத்து ஹலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.முதலில் அவரது தந்தை முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேக்கு கொரோனா தொற்று  முதலில் உறுதியானது.அதனையடுத்து அவரது மனைவி உஜ்ஜால விற்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனையடுத்து அவரது தன்கை அணிஷவுக்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்று பாதிபடைந்திருபதால் தீபிகா படுகோன் [பாக்க சென்றுள்ளார்.பிறகு தீபிகா படுகொனுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அவரது வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதா என எவ்வித தகவல்களால் கூறவில்லை.