தெலுங்கில் களமிறங்கிய தீபிகா படுகோன்!

Photo of author

By Parthipan K

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் தீபிகா படுகோன், தற்போது தெலுங்கில் எட்டிப் பார்த்து உள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் தீபிகா படுகோனின் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தெலுங்கில் இவருடன் ஜோடி போடுவது யார் தெரியுமா? பாகுபலி ஹீரோ பிரபாஸ்.

பாகுபலி திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இந்தப் படத்திற்கு அடுத்ததாக “சாஹோ”வில் நடித்துள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான சாஹோ படத்திற்கு  கலவையான விமர்சனமே கிடைத்தது. தற்பொழுது பிரபாஸ் சாஹோ படத்தை தயாரித்த யுவி  கிரியேஷன்ஸ் தயாரிப்பில் “ராதே ஷ்யாம்” படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குனர் கே.கே. ராதா கிருஷ்ணா.

இதைத்தொடர்ந்து வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய தேசிய விருது பெற்ற “மகாநதி” என்ற டத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 தீபிகா படுகோனே இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது தீபிகா படுகோன் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட்டில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் தீபிகா படுகோன் தற்போது தெலுங்கிலும் மாஸ் ஹிட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்  தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள்  இறங்கியுள்ளனர்.