ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே!! அடுத்த படம் ரெடி!!

0
72
Deepika Padukone paired with Rajini !! Next Movie Ready !!
Deepika Padukone paired with Rajini !! Next Movie Ready !!

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே!! அடுத்த படம் ரெடி!!

தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலமாக இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் பெரும்பான்மையான தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாடக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973-ஆம் ஆண்டில் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்த படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிர் எதிராளிக் கதாபாத்திரங்களில் நடித்தார். இவருடைய ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். இதன் மூலம் ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கி ஜானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டு முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி சில திரைப்படங்களை தயாரிக்கவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும் திராவிட அரசியலின் ஆளுமையாக இருந்து வருகிறார். இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு வழங்கியது. 2006 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது. ஹிந்தி திரைப்படத் துறையில் சிறந்த ஆளுமை விருது 45 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. இவர் தமிழில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாளை முதல் இப்படத்திற்கான டப்பிங் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றி படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். மேலும் ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்காக தேசிங்கு பெரியசாமியை ரஜினி அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது கதை கேட்டு அவருக்கு பிடித்ததால் அவரின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். எனவே இந்த படத்தின் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ராணா சரித்திர படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் ரஜினிக்கு உடல் நலம் குன்றியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதற்குப் பின் ரஜினியுடன் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்காக தீபிகா படுகோன் உடன் பேசி வருவதாக தகவல் பரவி வருகிறது.

author avatar
CineDesk