கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் நெப்போலியன் அவருடைய மூத்த மகனான தனுஷ் அவர்களுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பாக பல விமர்சனங்கள் வீடியோக்களாக வெளிவந்தது. அதனை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் மீண்டும் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டிருக்கிறது.
நெப்போலியன் அவர்கள் நடத்திவரக்கூடிய ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் இருக்கக்கூடிய தலைமை மருத்துவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் நெப்போலியன் அவர்களின் மூத்த மகனான தனுஷ் அவர்களின் உடல்நிலை குறித்து அவதூறு வீடியோக்கள் youtube இல் பரப்பப்படுவதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என புகார் ஒன்றினை அழித்திருக்கிறார். அதன்படி ஒரு வாரத்திற்குள் அவதூறாக பரப்பப்பட்ட யூடியூப் வீடியோக்கள் நீக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களிலேயே அவதூறு வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில் அந்த youtube அவர்களை தேடி அவர்களுக்கான தண்டனை வழங்கவும் காவல்துறை முடிவெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்பொழுது அவதூறு வீடியோக்களை பரப்பிய யூடியூப் அவர்களை தேடி வருவதாகவும் அந்த சேனல்களை உரிமையாளர் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் என காவல்துறை உறுதியளித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெப்போலியன் மூத்த மகன் ஆன தனுஷ் திருமணம் நடந்த முதலே பல வீடியோக்கள் அவரைக் குறித்தும் அவரது உடல்நலம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் எம் பி கனிமொழி சில தினங்களுக்கு முன்பாக நெப்போலியன் அவர்களின் வீட்டுக்கு சென்று தனுஷ் அவர்களுக்கு திருமண பரிசுகளை வழங்கி இருக்கிறார். இதனையும் வீடியோவாக எடுத்த நெப்போலியன் அவர்கள் இணையதளத்தில் போடவே பல youtube சேனல்களில் தனுஷின் உடல்நலம் குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.