அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு! நீதமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் அண்ணாமலை அவர்கள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக கட்சியின் பொருளாளர் டி.ஆர் பாலு அவர்கள் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரந்துள்ளார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
‘தி.மு.க பைல்ஸ்'(DMK Files) என்ற பெயரில் தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் திமுக கட்சியனரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அவர்கள் தொடர்ந்தார்.
திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தாக்கல் செய்த மனுவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு கருத்துக்களை அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். 10,841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்கள் எனக்கு சொந்தமானது என்று கூறியது முற்றிலும் தவறானது. அவதூறானது.
என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அண்ணாமலை அவர்களை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதி வழக்கு விசாரணைக்கு ஜூலை 14ம் தேதி அண்ணாமலை அவர்கள் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.