ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Photo of author

By Vijay

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Vijay

Defamation cases chasing Rahul Appear in court again!!

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

தொட்டால் விடாது என்ற பழமொழிக்கு ஏற்றது போல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்கு சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

மேலும் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அவையே முடங்கும் அளவிற்க்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் செயல்பட்டு வருகின்றனர். ராகுல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய மற்றொரு வழக்கில் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி ஆஜராகும்படி பாட்னா உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது,இந்த வழக்கினை பீகாரில் உள்ள சுசில்குமார் மோடி என்பவர் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ள போது மீண்டும் மற்றொரு வழக்கில் சிக்கியிருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே போராட்டம், ஊர்வலம், ஆலோசனை கூட்டம், எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது, உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அறிவித்து வரும் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த வழக்கிற்கு ராகுல் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்பதால் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது பெரும் பேசும் பொருளாக உள்ளது.