கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

Photo of author

By Parthipan K

கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா ,உபெர் போன்ற கேப் சேவை  நிறுவனங்களும் ,போக்குவரத்து வசதிகளை அளித்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் டாக்சி ,ஆட்டோ ,இருசக்கர வாகனங்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் பணம் செலுத்துவதை தவிர்த்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாக பல புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மாநில அரசு போக்குவரத்து விதிமீறலுக்கான ஸ்பார்ட் அபராதங்களை மாநில அரசு திருத்தம் செய்துள்ளது.தமிழகத்தில் டாக்சி ,ஆட்டோ போன்ற வாகனங்களை முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால்மோட்டர் வாகன சட்டத்தின் படி ரூ500அபராதம் விதிக்கப்படும்.பயணிகளை ஏற்றி செல்ல மறுத்தால் ரூ 50 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மும்பை டாம்பிவிளியைச் சேர்ந்தவர் கவிதா சர்மா.இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 2018ஜூன் மாதம் 12ஆம் தேதி சென்னைக்கு விமானத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் மாலை 5.50மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்படிருந்தது.அப்போது அவருடைய வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல 36கிமீ இருந்ததால் மாலை 3.30 மணியளவில் உபேர் டாக்சியை புக் செய்துள்ளர்.

ஆனால் தாமதமாக வந்த உபேர் டாக்சி டிரைவர் கவிதாவை மாலை 5.23மணிக்கு விமான நிலையத்தில் விட்டுள்ளார்.அப்போது கவிதா செல்லும் விமானத்தை தவறவிட்டுள்ளார்.அதனால் விமான முன்பதிவு செய்த பணம் விரயமாகியது.மேலும் புதிய கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் உபேர் டாக்சியை புக் செய்யும் பொழுது கட்டணம் ரூ 563 இருந்த நிலையில் ஆனால் கடைசியாக ரூ 703 கட்டணத்தை உபெர் நிறுவனம் வசூல் செய்துள்ளது.இது தொடர்பாக தானே கூடுதல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கவிதா வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம் உபேர் டாக்சி சேவையில் குறைபாடு இருப்பதை கூறியுள்ளார்.மேலும் நீதிமன்றம் வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்காக ரூ 10000வழக்கு செலவிற்கு ரூ 10000 என மொத்தம் ரூ 20000  கவிதா சர்மாவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.