மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் மும்மொழி கொள்கையை பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நாடாளுமன்றத்தில் “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
“புதிய கல்விக் கொள்கையின்படி நாடுமுழுவதும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் நேரத்தில் மூன்றாவது மொழியாக எதை கற்பிக்க வேண்டும் மற்றும் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அந்தந்த மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு.எந்த ஒரு மொழியும் திணிக்க படாது” என மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இதற்கு முன்பாக அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்துள்ளது.இதில் மும்மொழிக் கல்வி கொள்கை வலியுறுத்தப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.மேலும் தமிழகத்தில் எப்பொழுதுமே இரு மொழிகள் கொள்கை தான் நடக்கும் என்று என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.ஆனால் மத்திய அரசு மும்மொழி கொள்கை கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளது.
மேலும் திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசும்போது தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என தமிழக அரசு கூறியதை தான் வரவேற்பதாகவும்,அதே நேரத்தில் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றும், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு எடப்பாடியார் ,”புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும், அவர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதை எதிர்காலத்தில் தமிழக அரசு சிந்திக்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்.