தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

Photo of author

By Parthipan K

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் கல்வி நிலையங்களை திறப்பதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9- 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த அறிவிப்பும் பின்னர் திரும்ப பெறப்பட்டது. ஏனெனில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று  ஏற்பட்டது. அந்த நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதால்  தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

இந்த நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் பள்ளி திறப்பது எப்போது என்பதைப்பற்றி வினவியபோது செங்கோட்டையன், ‘தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,‘ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் தான் கொரோனா தாக்கம் அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று அமைச்சர் தெள்ளத்தெளிவாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்