கண்டிப்பாக இந்த ஆறு மாவட்டங்களில் லாக் டவுன்!
ஓர் ஆண்டு காலம் கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தது.சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா விருந்திற்கு அழைத்தது போல் அனைத்து நாட்டிற்கும் வந்து மனித உயிர்களை விருந்தாக சாப்பிட்டு சென்றது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைத்து மக்களின் உயிர்களையும் காவு வாங்கியது.
இதனால் மக்களின் நலன் கருதி அரசாங்கம் பொது முடக்கத்தை போட்டது.இதனால் மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பானது சிறிதளவு குறைய தொடங்கியது.இந்நிலையில் அரசாங்கம் சில விதிமுறைகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் அந்த விதிமுறைகளை மக்கள் நாளடைவில் கடைபிடிக்க காரணத்தினால் கடந்த வாரம் கொரோனா பதிப்பானது பெருமளவு பரவ ஆரம்பித்துவிட்டது.
அதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெகு வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இன்னும் அதிகப்படியாக பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.ஆகையால் மீண்டும் இந்த மாவட்டங்களுக்கு ஊரடங்கு அறிவிக்க சுகாதாரத்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.