இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்!

Photo of author

By Hasini

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் காரணமாக நீலகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் கனமழை,  நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இன்று தர்மபுரி அருகே ரயில் பாதையில் கூட நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ஓடியது நினைவில் வைத்துக்கொண்டு, யாரேனும் செல்ல வேண்டி இருந்தால் சற்று பொறுமை காத்து நான்கு நாட்கள் கழித்து சென்று வரவும்.