வாக்கு எண்ணிக்கையின் போது மேசைகள் குறைப்பா? ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இதில் பதிவான வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படம் என்று தேர்தல் ஆணையம் முன்னரே தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் வாக்குப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

இதற்கிடையில், மே மாதம் 2ஆம் தேதி ஒரே சமயத்தில் தபால் வாக்கு மற்றும் மின்னணு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இதற்கு முன்னரே தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக 10 முதல் 20 மணி நேரம் வரை ஆகலாம் என்று ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

காரணம் என்னவென்றால் நோய்தொற்றுக்கு பின்னர் நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையானது நள்ளிரவை கடந்தும் நடைபெற்றது மாநிலத்தில் முதல் 4 மணி நேரத்தில் 20 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவதற்கு தாமதமானது. நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக எல்லா தொகுதிகளிலும் 14 நாட்களுக்கு பதிலாக 7 மேசைகள் அமைக்கப்பட்டு அதில் வாக்குகள் எண்ணப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மே மாதம் இரண்டாம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிப்பதால் 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரிய வந்துவிடும். மதியம் 2 மணி அளவில் 50 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு விடும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் எதிர்பார்த்திருப்பதாகவும், மே மாதம் இரண்டாம் தேதி மாலைக்கு பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதிகளின் முடிவுகள் தெரிவதற்கு நள்ளிரவை கூட கடக்க நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணுவது குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை செய்திருக்கிறார். ஆலோசனைக் கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் மேசைகள் குறைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.