அரசு பள்ளிகளில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம்! மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு?

Photo of author

By Parthipan K

அரசு பள்ளிகளில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம்! மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் பெறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா என சமூக ஆர்வளர்களிடயே சந்தேகம் எழுந்துள்ளது. புதிய கல்வி மூலம் அனைத்து வகுப்பு புத்தகங்களையும் மாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து இந்த ஆண்டு 7, 8, 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாடத்திட்டம் மாற்றியமைக்க பட்ட புத்தகங்களை அச்சிட்டு பள்ளிகளில் வழங்கி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகளில் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க வகுப்புகளில் ஒரு சில பாடப்புத்தகங்கள் மட்டும் கொடுக்கவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். அதாவது 3 ஆம் வகுப்பில் வெறும் தமிழ் புத்தகம் மட்டுமே கொடுத்து உள்ளதாகவும் மற்ற புத்தகங்கள் இன்னும் வழங்கபடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே போல் 8,11 ஆம் வகுப்பில் ஒரு சில மாணவர்களுக்கு ஒரு சில பாட புத்தகங்கள் தரவில்லை எனவும் மாணவர்கள் கூறினார்கள். அதாவது மேற்கொண்டு விவரம் கேட்கும் பொழுது மாணவர்கள் கூறியதாவது, ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் புத்தகம் வந்திருப்பதாகவும் மற்றவர்களுக்கு இன்னும் வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் கேட்கும் பொழுது , தங்களுக்கு கிடைத்த புத்தகம் இவ்வளவு தான் மற்ற மாணவர்களுக்கு கல்வித் துறை அச்சிட்டு அனுப்புவதாக கூறுவதாக கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் இதே நிலைதான் உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் அன்றே இலவச நோட்டு புத்தகங்கள் கொடுக்கும் என தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்தார் என்பது குிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் இணைய வழியில் பள்ளிகள் புத்தகங்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் புத்தகம் இல்லாமல் எப்படி தேர்வை எதிர்கொள்வது என வினா எழுப்புகின்றனர்.

தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காமல் இருக்கும் புத்தகங்களை அந்நிறுவனம் E- சேவை மையங்களில் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களும் அரசு E- சேவை மையங்களில் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி படிக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். E- சேவை மையங்களிலும் புத்தகம் பெறுவதற்கு தாமதம் ஆகிறது எனவும் கூறுகின்றனர்.

இதனால் புத்தகங்களை பெறுவதற்கு அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்வதாக கூறப்படுகிறது. அல்லது பணம் கொடுத்து E- சேவை மையங்களில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதாக பொது மக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.