இப்பொழுது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏகப்பட்ட நிறைய அடங்களை சேகரிக்க இடங்கள் அதாவது அதிக ஜிபி ஸ்பேஸ் தரப்படுகிறது.
அப்படி தரும் பொழுது மொபைல்கள் எந்த ஒரு சிக்கலும் இன்றி நன்றாக வேகமாக இயங்குகிறது. அதனால் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்? அவர்களுக்கு தேவையான அல்லது தேவையில்லாத அனைத்து அப்ளிகேஷன்களில் அவருடைய ஃபோன்களில் ஏற்றிக் கொள்கிறார்கள்.
அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் அந்த போனில் அப்படியே இருக்கின்றது. ஆனால் அதனால் மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா.
நமது போனில் இருக்கும் அந்த அப்ளிகேஷன்கள் நமது தகவல்களை திருடுகின்றது. திருடுவது மட்டும் இல்லாமல் நம்முடைய தகவல்களை மற்ற ஆப்புகளுக்கும் மற்ற கம்பெனிகளுக்கும் தகவல்களை பகிரப்படுவதனால் நமக்கு வரும் விளம்பரங்கள் அது சம்பந்தமாகவே வரும். இப்படி வருவதனால் மக்கள் ஏமாந்து பணத்தை இழக்க கூட நேரிடும்.
தரவுகள் என்பது என்ன ? தரவுகள் என்பது நம்முடைய தகவல்கள்தான் தரவுகள் என்று சொல்வோம். அந்த தகவல்களை ஒன்றாக சேகரித்து வைத்து அதை பயன்படுத்துவது தான் தரவுகள். இந்த தரவுகளின் அடிப்படையில் தான் உங்களது ஃபோனிலோ அல்லது நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்ற அப்ளிகேஷன்களிலோ நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் சம்பந்தப்பட்ட தகவல்களை உங்களை வந்து அது காண்பிக்கும்.
உங்களை அது கவர செய்யும். அப்படி கவர செய்யும் பொழுது நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்பதை அது புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தகவல்களை உங்களுக்குத் தந்து கொண்டே இருக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அல்லது அதை வாங்கவோ அல்லது அதை செய்ய முயற்சி செய்வீர்கள். இதுதான் அவர்களின் எண்ணம்.
அதனால் உங்களது ஃபோனில் இந்த 13 அப்ளிகேஷன்கள் இருந்தால் தயவு செய்து இதை நீக்கி விடவும்.
1. Essential Horoscope for Android
2. 3D Skin Editor for PE Minecraft
3. Logo Maker Pro
4. Auto Click Repeater
5. Count Easy Calorie Calculator
6. Sound Volume Extender
7. LetterLink
8. Numerology: Personal horoscope & number prediction
9. Step Keeper: Easy Pedometer
10. Track Your Sleep
11. Sound Volume Booster
12. Astrological Navigator: Daily Horoscope &
13. Universal Calculator