தமிழக முதல்வருடன் டெல்லி முதல்வன் நாளை சந்திப்பு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாளை அதாவது ஜூன் 1ம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து மத்திய அரசானது ஆளுநரக்கு அதிகாரம் வழங்கும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாடு முழுவலும் உள்ள எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இதையடுத்து ஜப்பானில் இருந்து இன்று தமிழகம் திரும்பும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நாளை அதாவது ஜூன் 1ம் தேதி வியாழக்கிழமை டெல்லி முதல்வர் அவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் சொயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடித்தினார்.