விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கூட்டணி!

Photo of author

By Sakthi

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருக்கின்றது திமுக கூட்டணி.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் 19வது தினமாக விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையிலே இன்றுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பேராதரவு தர வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டில் எதிர்வரும் 18ஆம் தேதி விவசாய சங்கங்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறார்கள் அதேபோல திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தக் கூட்டணியின் தலைவர்கள் இன்றைய தினம் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், கடும் குளிரையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போராடிவரும் தேச பற்றாளர்கள் விவசாய பெருங்குடி மக்களை அவமதிக்கும் விதமாக, அந்த போராட்டத்தின் தீவிரவாதிகள் நுழைந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் அதே போன்ற பல கருத்துக்களை தெரிவித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

விவசாயிகளின் இந்த போராட்டத்தை சரியாக மதிப்பிட தெரியாமல் அவமானம் செய்து வரும், மத்திய அரசின் தவறான நடவடிக்கை தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் மத்திய அமைச்சர்கள் உடைய பிற்போக்குத்தனமான கருத்தையும் கண்டித்து அறிவுரை கூறாமல் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சுயநலப் போக்கு என்பது கவலை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த செயல் கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகாரப் போக்குடனும் ஆணவ பேச்சுடனும் போராட்டத்தை கையாள முயற்சிக்கும் மத்திய அரசை தட்டிக்கேட்க திராணி இன்றி அடங்கிக் கிடக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்கும் விதமாகவும், விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், எதிர்வரும் 18ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அறவழியில் எங்கள் கூட்டணி சார்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.