ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

0
205

திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் விவசாயிகளுடைய போராட்டம் நடந்து வருகின்றது என்று தமிழக பாஜக வின் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த, அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ,ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் அரசியல் வருகை பாஜகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இணைவது தொடர்பாக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

இப்போது வரையில் பாஜக அதிமுக கூட்டணியில் தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக தேசிய தலைமை முடிவு எடுக்கும் என்றும், வேளாண் சட்டத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிவந்து இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். அதோடு திமுக தூண்டுதலின் பேரில்தான் விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.

திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்பட்ட பயம் காரணமாக, ஆன்மீகம் விவேகானந்தர் என்றெல்லாம் பேசி வருகின்றார், கடவுள் இல்லை என இனிமேலும் போய் உரைத்துக் கொண்டிருந்தால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று ஸ்டாலின் அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டார் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் முருகன்.

Previous articleவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கூட்டணி!
Next articleசென்சாருக்கு சென்றது மாஸ்டர்! திரைப்படம் ரசிகர்கள் மகிழ்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here