தமிழ் சினிமா துறையில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை ஆட்கொண்டவர் டெல்லி கணேஷ் ஆவார். வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு அவர் அவர் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாக உள்ளது.
400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரின் உடல், இன்று சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் சினிமா துறையில் நடிகராக அறிமுகமானார். மேலும், இவர் தக்ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் வருவதற்கு முன்பு 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் இவர் பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தான் சினிமா துறையில் குணச்சித்திர வேடம், வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.
அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் டெல்லி கணேஷ், கமல்ஹாசனும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். வெள்ளித்திரைகளும் தன்னுடைய பாதங்களை சன் டிவி சீரியல் மூலம் பதித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படி தன்னுடைய நடிப்பால் அனைவரையும் தன் பால் ஈர்த்த அற்புத நடிகர் ஆன டெல்லி கணேஷ் அவர்கள் தன்னுடைய 80 ஆவது வயதில் சென்னை ராமபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அவரது இல்லத்திலேயே அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமா துறையினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.