கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலைக் கவலைக்கிடமாகியுள்ளது.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயன் கடந்த 17 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமாகிய நிலையில் தற்போது நிமோனியா பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றதால், அவருக்கு அடுத்ததாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.