அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு! 4 வாரங்களுக்குள் மத்திய அரசு இதை செய்ய உத்தரவு

Photo of author

By Anand

அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு! 4 வாரங்களுக்குள் மத்திய அரசு இதை செய்ய உத்தரவு

Anand

Agnipath Scheme

அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு! 4 வாரங்களுக்குள் மத்திய அரசு இதை செய்ய உத்தரவு

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று டெல்லி உயரநீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது ராணுவத்தில் அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும்  மத்திய அரசு விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதே போல அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், ராணுவ ஆயுதப்படைகளில் நிலுவையில் உள்ள பல்வேறு ஆள்சேர்ப்பு செயல்முறைகள் குறித்து தனி பதில் நகலை தாக்கல் செய்யுமாறும் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மூலம் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.