தித்திக்கும் சுவையான பாதாம் அல்வா – செய்வது எப்படி?

0
115
Delicious almond alva - how to make it?
Delicious almond alva - how to make it?

தித்திக்கும் சுவையான பாதாம் அல்வாசெய்வது எப்படி?

பாதாம் பருப்பு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். மேலும், பாதாமில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள எச்.டி.எல்.கொலஸ்டிரால் அதிகரிக்கச் செய்யும்.

சரி வாங்க ருசியான பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு – 2 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 1 கப்
தண்ணீர் – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி 2 மணி நேரம் பாதாம் பருப்பை ஊற வைக்க வேண்டும்.
பாதாம் நன்கு ஊறிய பிறகு, பாதாம் பருப்பின் தோலை நீக்க வேண்டும்.
தோல் நீக்கிய பாதாம் பருப்பை ஒரு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த பாதாம் விழுதை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின்னர், நெய் மேலே திரிந்து வரும் போது, சர்க்கரையை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
சர்க்கரை நன்றாக கரைந்து வரும் போது மீதமுள்ள நெய்யை சேர்க்க வேண்டும்.
நெய் மேலே பிரிந்து வரும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
குங்குமப் பூவை பாலில் சேர்த்து கூட அதில் சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்காக சிறிதளவு ஏலக்காயை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

Previous articleசுவையாக சில்லி சிக்கன் செய்யலாம் வாங்க!
Next articleஎன் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…!