சிம்மக்குரலோன் திரைபடத்திற்க்கே தன்னை முழுவதும் அர்ப்பணித்த தமிழ் நடிகர் பற்றி சுவையான செய்திகள்!!
தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
இவர் நடிப்பதற்கு முன் எப்பொழுதுமே படத்தின் கதைகளையும் உள்வாங்கி பின்பு தான் நடிக்க தொடங்குவார். இந்த கதாபாத்திரத்திற் நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக் கொள்வாராம்.தான் நடிக்கப் போகும் கதாபாத்திரத்தில் கேட்டாப் எப்படி இருக்க வேண்டும் சிறு சிந்தையுடன் யோசித்து உடல் அலங்காரமும் மற்றும் முக பாவனைகளையும் அவரே தேர்ந்தெடுத்து விடுவாராம்.
நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. மேலும் படத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்வாராம். படம் முழுவதும் தன்னுடைய இடுக்கான தோற்றத்தை வெளிக்காட்டுவாராம். படப்பிடிப்பில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப முடி இல்லாததால் விக் போட்டுக் கொள்வாராம்.
எவ்வளவுதான் இதனால் வலி ஏற்பட்டாலும் அதனால் தலை அரிப்பு எடுத்தாலும் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் அப்படியே அந்த விக்கை தலையிலே போட்டுக் கொள்வாராம். இதைப் பார்த்த சக நடிகர்கள் கண் கலங்கியபடி அவரைப் பார்த்து அப்படியே திகைத்து இருப்பார்களாம்.
மேலும் சிவாஜியின் நடிப்பில் மற்ற நடிகர்களை விட தனித்துவமிக்கதாகவும் அவருடைய முக பாவனை மற்றும் உடல் ,மொழி மட்டுமின்றி அவரது கண்கள், புருவங்கள், மீசை, நெற்றி, மூக்கு, கண்ணம் உதடு என அவருடைய உடலில் உள்ள எல்லா பாகங்களும் அதற்கேற்ற போல் அசைவு கொடுக்குமாம்.
இப்படி நடிப்பில் ஜாம்பவனாக இருக்கும் சிவாஜி கணேசனுக்கு திரைப்பட உயரிய விருந்தான தாதா சாகேப் பால்கே விருதையும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் மட்டுமின்றி செவாலியர் விருதை பெற்ற முதல் நடிகராகவும் தமிழகத்தில் திகழ்ந்துள்ளார்.மேலும் இவர் அரசியலில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக சில காலம் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.