டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்!!! தமிழகத்தை சேர்ந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கொடுத்த வாய்ப்பு!!!

0
124
#image_title

டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்!!! தமிழகத்தை சேர்ந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கொடுத்த வாய்ப்பு!!!

இந்தியாவில் தமிழகத்தில் அதுவும் சென்னையில் உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரராகும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளது.

கிரிக்கெட் விளையாடுவது என்பது சாதாரணமாக விளையாட்டாக இருந்தாலும் தன்னுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவருக்கும் இலச்சியமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் அணிக்கு கிரிக்கெட் விளையாடுவதில் பல போட்டிகள் நிலவி வருகின்றது. இதனால் திறமை இருக்கும் பல வீரர்களின் இலட்சியம் கனவாக போகின்றது. அந்த வகையில் தனது நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று உணவு டெலிவரி வேலை வேலை செய்யும் 29 வயது இளைஞர லோகேஷ் குமார் அவர்களுக்கு நெதர்லாந்து அணி மூலமாக ஜாக்பாட் அடித்துள்ளது.

அதாவது அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு 15 பேர் கொண்ட நெதர்லாந்து அணி சில நாட்களுக்கு முன்னரே இந்தியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்திய நாட்டின் ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சில் அதிகம் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக நெதர்லாந்து அணி நிர்வாகம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதாவது வலைப் பயிற்சியில் பேட்டிங் ஆடும் வீரர்களுக்கு பந்து வீச சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த உணவு டெலிவரி வேலை செய்யும் இளைஞர் லோகேஷ் குமார் அவர்கள் நெதர்லாந்து அணி வெளியிட்ட அறிவிப்பதற்கு விண்ணப்பித்தார். இவருடன் சேர்ந்து சுமார் 10000 பேர் இதற்கு விண்ணப்பித்தனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த லோகேஷ் குமார் அவர்களும் மேலும் 3 பேர் என நான்கு பேரை நெதய்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்தது.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான லோகேஷ் குமார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 5வது டிவிஷனுக்கு நான்கு முறை விளையாடியுள்ளார். இதையடுத்து 4வது டிவிஷனுக்கு விளையாடுவதற்கு விண்ணபித்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் குமார் அவர்களுக்கு நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அணி பெங்களூரில் உள்ள ஆலூரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. லோகேஷ் குமார் அவர்களின் சுழற்பந்து வீச்சை பார்த்த நெதர்லாந்து அணி மர்ம சுழற்பந்து வீச்சாளர் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் லோகேஷ் மற்றும் தேர்வான 3 பேரும் நெதர்லாந்து அணியுடன் சேர்ந்து வலைப்பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து லோகேஷ் குமார் அவர்கள் “நெதர்லாந்து அணிக்காக நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். என்னுடைய திறமையை நெதர்லாந்து அணி அங்கீகரித்துள்ளது. நெதர்லாந்து அணி தனக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளது. நானும் நெதர்லாந்து அணியில் ஒருவராகவும் நெதர்லாந்து அணியின் குடும்ப உறுப்பினராகவும் மாறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

லோகேஷ் குமார் உள்பட தேர்வான 4 பேரின் விவரங்கள்…

1. லேகேஷ் குமார் – தமிழகம் – இடதுகை சுழற்பந்து வீச்சாளர்

2. ராஜாமணி பிரசாத் – தெலுங்கானா – இடதுகை வேகப்பந்து வீச்சாளர்

3. ஹேமந்த் குமார் – ராஜஸ்தான் – இடதுகை வேகப்பந்து வீச்சாளர்

4. ஹர்ஷா சர்மா – ஹரியானா – இடதுகை சுழற்பந்து வீச்சாளர்