DMK VSK: திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியானது இம்முறை அதிகளவு தொகுதிகளை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரீதியாக அக்கட்சியின் எம்பி துரை ரவிக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த போது கிட்டத்தட்ட 10 தொகுதிகளிலிருந்து ஆறு தொகுதிகள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் தற்போது எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக மாறி உள்ளதோடு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதால் அதற்கேற்ற தொகுதி வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் தற்போதையிலிருந்து தங்களது டிமாண்ட்டை வைக்க ஆரம்பித்துள்ளனர். இது ஆளும் கட்சியான திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
மேலும் தற்போது புதிதாக ஆரம்பித்துள்ள விஜய் உட்பட பலரும் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதன் தேவைகளை நிறைவேற்றி தரவில்லை என்றால் அதனை மையமாக வைத்து கூட்டணி கலைய கூடும்.
அதிலும் விஜய் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியை பிரிக்க வேண்டும் என்பதையே தலையாய நோக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் எண்ணம் நிறைவேறக்கூடாது என்றால் கட்டாயம் கூட்டணி கேட்கும் டிமான்டுக்கு ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ஸ்டாலின் மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார்.