இயக்குனரிடம் ஹீரோயின்கள் வேணும் என டிமாண்ட்! பிரபுவின் ஆதாரப்பூர்வ வீடியோ வைரல்!

Photo of author

By Rupa

இயக்குனரிடம் ஹீரோயின்கள் வேணும் என டிமாண்ட்! பிரபுவின் ஆதாரப்பூர்வ வீடியோ வைரல்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன் முதலில் சிம்பு மற்றும் வரலட்சுமி வைத்து போடா போடி என்ற படத்தை எடுத்தார். அது பெருமளவில் வெற்றி அடையவில்லை. அதனையடுத்து வேலையில்லா பட்டதாரியில் தனுஷுடன் கெஸ்ட் ரோலாக ஒருசில காட்சியில் வருவார். அதனையடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இதுவரை இல்லாத பெயர் நானும் ரவுடிதான் இயக்கத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு பெற்று தந்தது. படத்தை அடுத்து பெரும் பிரபலம் அடைந்தார்.

மேலும் நயன்தாராவுடன் காதல் என்று பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. அந்த கிசுகிசுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதுமட்டுமின்றி தற்பொழுது நெற்றிக்கண் என்ற படத்தில் நயன்தாரா நடித்தார். அப்படம் சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்று அளித்தார்.அப்பொழுது தங்களுக்குள் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் திருமணம் ,அடுத்த வருட முடிவுக்குள் நடை பெற்று விடும் என்றும் அதற்கு தான் தற்பொழுது போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ளார் என்றும் பல தகவல்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது. விக்னேஸ்சிவன் தற்பொழுது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

https://www.instagram.com/p/CXARBRXslwE/?utm_medium=copy_link

நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகியாக நடித்திருக்கின்றனர்.அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். தற்பொழுது அதன் டப்பிங் நடைபெற்று வருகிறது. இன்று பிரபுவுடன் டப்பிங் செய்யும் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் காபி குடித்துக்கொண்டு பேசும் காட்சிகள் பதிவாகி உள்ளது.அப்பொழுது பிரபு இப்படி தனியாக டப்பிங் நடத்தாமல் பல ஹீரோயினுடன் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.