குறியீடு குறித்து நகை கடைகள் கையில் எடுத்த ஆர்பாட்டம்! உங்களுக்கு ரத்தம்! எங்களுக்கு தக்காளி சட்னியா!

Photo of author

By Hasini

குறியீடு குறித்து நகை கடைகள் கையில் எடுத்த ஆர்பாட்டம்! உங்களுக்கு ரத்தம்! எங்களுக்கு தக்காளி சட்னியா!

இந்தியாவில் மட்டும் தான் அனைத்திற்கும் நகை அவசியம் என்ற சடங்குகள் நிறைய உள்ளது. நல்ல காரியம் அல்லது அமங்கல விஷயம் என்றாலும், இங்கே உள்ள சடங்குகளில் தங்கம் வைத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. வசதி உள்ளவர்கள் எவ்வளவு என்றாலும் செய்வார்கள் ஆனால் வேலைக்கு போனால் தான் சாப்பிட முடியும் என்பவர்கள் எல்லாம் எங்கே போவது.

சிலர் இதில் முதலீடு செய்து பதுக்கி வைக்கின்றனர். அதை பயன்படுத்தி நகை கடைகள் பொது மக்களிடம் கொள்ளை லாபம் பார்கின்றனர். இவர்கள் மட்டும் நாம் வாங்கும் ஒரு பவுனுக்கு செய்கூலி, சேதாரம் என்று பல ஆயிரங்களை எடுத்து கல்லா கட்டிக் கொள்கின்றனர். ஒரு சிறு நகைக்கடை ஆனாலும் சரி பெரிய நகைகடை ஆனாலும் சரி செய்கூலி, சேதாரம் என்று மட்டுமே பல ஆயிரங்களை, பொதுமக்கள் இவர்களுக்கு தண்டம் அழ வேண்டிய சூழ்நிலை தொடர்கிறது.

தற்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த விஷயத்தை நடைமுறைப்படுத்தினால் எங்கே நமக்கு நஷ்டம் ஆகி விடுமோ என்று தற்போது அனைத்து நகை கடைக்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அவர்களால் அதிக லாபம் பார்க்க முடியாது என்று கண் கூடாக தெரிகிறது. ஒரு நகைக் கடையை ஆரம்பித்தால் போதும், ஊரெல்லாம் கிளைகள் திறந்து மக்களை ஏமாற்றி சம்பாதிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் சொல்லும் விதிகளை ஏற்க மறுக்கின்றனர் இது எந்த விதத்தில் நியாயம்.

தற்போது மத்திய அரசு அனைத்து நகை நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என மத்திய அரசு புதிய கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து பல நகைக் கடைகள் இன்று 11.30 வரை திறக்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்து இருந்தனர். அதேபோல் தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டத்தில் நகை கடைகளை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது வாயில் கருப்பு துணி கட்டியும் கோஷமிட்டனர். தங்க நகை கடைகளில் விற்கப்படும் அனைத்து தங்க நகைகளும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தனி அடையாள எண் மூலம் தங்க நகை எங்கு உருவாக்கப்படுகிறது, யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது, யார் வாங்குகிறார்கள் என்பதை சுலபமாக அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு நகை வணிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகம் முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன்படி தேனி மாவட்டம் முழுவதும் நகை கடைகள் இன்று நேற்று காலை 9 மணி முதல் பகல் 11 30 மணி வரை இரண்டரை மணி நேரம் அடைக்கப்பட்டன. மேலும் தேனி மாவட்ட தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், தேனி நகர், மதுரை சாலையில் நகைக்கடை உரிமையாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் பிரேம் சாய் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சத்தியநாராயணன், தேனி நகர தலைவர் சோமசுந்தரம், மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு புதிய நடைமுறையை கைவிடவேண்டும். நகை விற்பனையில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் இது குறித்து மாவட்ட தலைவர் கூறுகையில் தேனி மாவட்டத்தில் 350 நகைக்கடைகள் உள்ளன.

அவை அனைத்தும் அடைக்கப்பட்டன. சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பாதிக்காதவாறு ஹால்மார்க் மற்றும் ஹால்மார்க் நகைகளை எளிய முறையில் விற்பனை செய்யும் அளவுக்கு விதி விலக்காக சட்ட விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், ஹால்மார்க் லைசன்ஸ் பெற்ற வியாபாரிகளை கடுமையான சட்டத்தை கொண்டு ஒடுக்க நினைக்கும் அணுகு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார். இது போல் தேனி மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து பகுதிகளிலும் இந்த இரண்டரை மணி நேர மூடல் தொடர்ந்தது.