நடிகையின் காலில் விழுந்த ராம்கோபால் வர்மா! பிறந்தநாள் பார்ட்டியில் குத்தாட்டம்!

0
252

எப்பொழுதும் அடல்ட்ஸ் ஒன்லி என்ற சர்ச்சைக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. அவர் இப்பொழுது நடிகையின் பர்த்டே பார்ட்டியில் நடனமாடி காலில் விழுந்த சம்பவம் தான் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

சர்ச்சைக்கு பெயர் போன டைரக்டர் என்றால் ராம்கோபால் வர்மாவை கூறுவார்கள். இவர் இப்பொழுது எல்லாம் அடல்ஸ் ஒன்லி புகைப்படங்களை தான் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

ஆர்ஜிவி வேர்ல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் தளம் வைத்திருக்கிறார். அந்த தளத்தில் படம் பார்ப்பதற்கு ஒரு தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

 

இப்பொழுதெல்லாம் லாக் டவுன் என்பதால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ஆர்ஜிவி. அதிலும் இவர் அடல்ஸ் ஒன்லி படங்களை மட்டும் தான் வெளியிடுகிறார். அதை பார்க்க இளைஞர்கள் மோதி வருகின்றனர்.

 

எப்பொழுதும் சர்ச்சைக்கு பெயர் போன இவர் பரபரப்பை கிளப்பும் வகையில் தான் படத்தின் டைட்டில்களும் இருக்கும். நாக்ட் கிளைமாக்ஸ், போன்ற தலைப்புகள் சமூக வலைதளங்களில் மிகவும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.ஆனாலும் ஆர்ஜிவி அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

 

இப்பொழுது மறுபடியும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ட்விட்டரில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இனயா சுல்தான் என்ற நடிகையின் பர்த்டே பார்ட்டியில் மிகவும் படுமோசமாக இருவரும் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் இருப்பது நான் அல்ல, என்னுடன் நடனமாடும் சிவப்பு நிற டிரஸ் அணிந்திருப்பவர் இனயா சுல்தான் அல்ல,சத்தியமாக சொல்கிறேன் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

மேலும் நடிகை இனயா சுல்தானும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ராம்கோபால் வர்மா இருந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

 

 

சர்ச்சையான அடல்ட் படங்களை எடுத்து விமர்சனத்திற்கு ஆளாவதை காட்டிலும் அர்த்தமுள்ள படங்களை இயக்கி நற்பெயர் பெறுங்கள் என பொதுமக்கள் கமெண்டில் தெறிக்க விடுகிறார்கள்.

 

 

Previous articleரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே!
Next articleகுறியீடு குறித்து நகை கடைகள் கையில் எடுத்த ஆர்பாட்டம்! உங்களுக்கு ரத்தம்! எங்களுக்கு தக்காளி சட்னியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here