கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!

0
104

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை…

 

தேனியில் நடைபெறும் கொடநாடு கொலை கொள்ளூ வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்.

 

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் அமமுக கட்சி நிர்வாகிகளின் சார்பில் நடைபெறுகின்றது.

 

தேனி மாவட்டத்தில் பங்களாமேடு பகுதியில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கி பேசினார். தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 

தேனி மாவட்டத்தில் நேற்று(ஜூலை31) அதிமுக கட்சியின் சார்பில் மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, செங்கோட்டையன், கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, தங்கமணி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல கருத்துக்களையும் அவர்கள் கூறியதாக தெரிகின்றது.

 

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேனியில் இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் அவர்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleஅழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…
Next articleதமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்!!