தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! பீதி அடையும் மக்கள்!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு மற்றும் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் போட்டித் தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மழை காலம் முடிவடைந்து பனி காலம் தொடங்கியுள்ளது. அதனால் கொசுக்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அவை டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற காய்ச்சல்களை உருவாக்கி வருகின்றது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி பற்றாக்குறைவு நாள் தரையில் படுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக இருந்த கொரோனா வார்டுகள் அனைத்தும் காய்ச்சல் வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.