வங்க தேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்… இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல்…
வங்கதேச நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு காய்ச்சல் இந்தியா மட்டுமில்லாமல் உலகில் பல நாடுகளில் இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை வங்கதேச நாட்டில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச நாட்டு சுகாதார இயக்குநரகம் அறிக்கூ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கூயில் “இந்த ஆண்டு இதுவரை 51832 பேர் டெங்கா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 59256 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் மட்டும் 43854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் டாக்கா நகரில் 1168 பேர் உள்பட மொத்தம் 2694 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக இருந்த நிலையில் டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை வங்கதேசம் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 42195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.