மிக வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்!! இன்று மட்டும் 8 பேர் இறப்பு!!

Photo of author

By Vinoth

வங்கதேசம்: ஏடிஸ் கொசுக்கள், வயிற்று வலி, வாந்தி, மூக்கில் இரத்தவருதல், சுகாதாரதுறை.

தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு  415 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த காய்ச்சல் அதிகமாக வங்கதேசத்தில் பரவிவருகிறது அதற்க்கு காரணம் அங்குள்ள ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவிவருகிறது என கண்டுப்பிடிக்கபட்டுள்ளது. கடந்த ஒரு நாள் மட்டும் 1390 பேர் இந்த டெங்கு காய்ச்சல் மூலமாக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த டெங்கு காய்ச்சலால் தர்போத்கு வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை சுமார் 82,000 பேர் நெருக்கயுள்ளது.

குறிப்பாக இன்று மட்டும் டெங்கு காய்ச்சல் மூலம் 8 பேர் இறந்தனர்.  மேலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் மூலம் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டு தற்போது வரை மருத்துவமனையில் 79,984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வங்கதேசத்திலுள்ள டாக்காவில் இன்று மட்டும் புதிய டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சுமார் 388 பேர் அனுமதிக்கக்பட்டுள்ளனர். என்று சுகாதாரதுறை சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், டாக்கா பிரிவில் 391 பேரும், மைமென்சிங் பிரிவில் 44 பேரும், சட்டோகிராம் பிரிவில் 172 பேரும், குல்னா பிரிவில் 159 பேரும், ராஜ்ஷாஹி பிரிவில் 96 பேரும், ரங்பூர் பிரிவில் 19 பேரும், பரிஷால் பிரிவில் 123 பேரும், மேலும் 9 பேர் மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த காய்ச்சல் அறிகுறிகள் இது வயிற்று வலி,  வாந்தி அல்லது மலத்தில் இரத்தம் வருதல், ஈறுகள் மற்றும்  மூக்கில் இரத்தவருதல், அடிக்கடி வாந்தி அல்லது அதிக  சோர்வு அல்லது மன அமைதியின்மை ஆகியவை இதன் அறிகுறிகள். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகிறது அம்மாநில அரசாங்கம்.