டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் தயவு செய்து செய்யாதீங்க!!

Photo of author

By Divya

டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் தயவு செய்து செய்யாதீங்க!!

Divya

தற்பொழுது உடல் வியர்வை கட்டுப்பட பர்ஃபியூம்,டியோடரண்ட்,ரோல் ஆன் என்று பல வாசனை நிறைந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த வாசனை திரவியங்கள் உடல் வியர்வையை கட்டுப்படுத்தும் என்றாலும் நாம் அதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அதன் பலனை அனுபவிக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் வியர்வை துர்நாற்ற பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.முன்பை போல் அல்லாமல் தற்பொழுது அனைவரும் வெளியில் செல்ல தொடங்கிவிட்டோம்.இதனால் நாம் நம்மை அழகாக வைத்துக் கொள்ள பல அழகு பொருட்களை பயன்படுத்துகின்றோம்.

குறிப்பாக வியர்வை துர்நாற்றம் கட்டுப்பட நாம் பல பிராண்டு வாசனை திரவியம் பயன்படுத்தி வருகின்றோம்.இந்த வாசனை திரவியங்கள் அனைத்தும் வியர்வையை கட்டுப்படுத்தும் என்றாலும் அதை பயன்படுத்தும் விதம் ஒரே மாதிரி இல்லை.ஆனால் பெரும்பாலானோர் பர்ஃபியூம் மற்றும் டியோடரண்ட்டை ஒரே மாதிரி தான் பயன்படுத்துகின்றனர்.

பர்ஃபியூமை ஆடைக்கு மேலும் டியோடரண்ட்டை உடல் மேலும் பயன்படுத்த வேண்டும்.டியோடரண்ட்டை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தினால் தான் வியர்வை முழுமையாக கட்டுப்படும்.டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் உடலில் வியர்த்து போன பிறகு டியோடரண்ட் பயன்படுத்துகிறார்கள்.இதனால் எந்த ஒரு பயனும் ஏற்படாது.குளித்த முடித்த உடன் பாடியில் டியோடரண்ட் ஸ்ப்ரே செய்தால் மட்டுமே வியர்வை வாசனை கட்டுப்படும்.அதிக நேரம் உடல் மணமாக இருக்கும்.

டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் அதை உடலில் படும்படி பயன்படுத்தினால் அலர்ஜியாக வாய்ப்பிருக்கிறது.எனவே சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் சிறிது இடைவெளிவிட்டு டியோடரண்ட் பயன்படுத்துங்கள்.

அதேபோல் ஒரே நேரத்தில் அதிகமாக டியோடரண்ட் ஸ்ப்ரே செய்வதை தவிருங்கள்.இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே டியோடரண்ட் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.ஒருவேளை உங்களுக்கு டியோடரண்ட் அலர்ஜியாக இருக்கிறது என்றால் நீங்கள் ஆல்ஹகால் அல்லாத டியோடரண்ட் வாங்கி பயன்படுத்துங்கள்.