பள்ளி மாணவர்களுக்கு ரூ.5000 குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!!மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Jeevitha

Big News for school students: ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 13.11.2024 அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000 என அறிவித்துள்ளது.

தமிழக அரசு, நேரு பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்துகிறது. அதில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை என அறிவித்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் இடம் ஆண்கள் (தெற்கு) மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படும்.

அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000,  இரண்டாம் பரிசு ரூ.3000,  மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். அது மட்டும் அல்லாமல் இந்த விழாவில் பங்கு பெரும் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தேர்வு செய்து சிறப்பு பரிசு தொகை ரூ.2000 வழங்க பட உள்ளது.

இந்த போட்டிக்கான தலைப்புகள் இந்தியாவின் விடிவெள்ளி – ஜவஹர்லால் நேரு,  குழந்தைகளை விரும்பிய குணசீலர்,  பஞ்சசீலக் கொள்கை ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் கலந்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல் மேலும் தகவல் அறிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 04286292164 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.