சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்!

Photo of author

By Hasini

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்!

Hasini

Depression at 170 km very close to Chennai! 45 km of wind due to it!

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்!

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான நாட்களை விட சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. அதன்படியே தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக அளவில் கன மழை பதிவாகி வருகிறது. மேலும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் அதிக மழை மக்களை போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை நேரத்தில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எனவே அதன் காரணமாக சென்னையில் இன்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த  காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் சேர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இரவு முழுக்க பெய்த கன மழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இன்று பல சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.