பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!!

Photo of author

By Sakthi

பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!!
திமுக கட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் நாசர் அவர்கள் திமுக நடத்தும் இரண்டாண்டு சாதனை கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டசபையில் இருந்து முதல் முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த முறை திமுக அமைச்சர்களின் பதவி மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த முறை பால்வளத்துறை அமைச்சர் பதவி நாசர் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தி அடைந்த அவர் திமுக நடத்தும் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டசபையில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் யாரும் இடம்பெறாமல் இருந்த நிலையில் இந்த முறை டிஆர்பி ராஜா அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு எந்த அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரியவில்லை.