சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – குட்டை உடைத்த அமைச்சர்கள்!

0
234
சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - குட்டை உடைத்த அமைச்சர்கள்!
சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - குட்டை உடைத்த அமைச்சர்கள்!

சிற்றரசர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – குட்டை உடைத்த அமைச்சர்கள்!

திருச்சியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதையடுத்து அதில் முதல்வர் அமைச்சர் கே என் நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அன்பில் மகேஷ் அவரது நண்பர் உதயநிதி குறித்து புகழாரம் சூட்ட ஆரம்பித்தார். ஆனால் அவ்வாறு பேசும் பொழுது முதல்வர் ஸ்டாலின் முகத்தில் ஒரு ரியாக்ஷனும் இல்லை.

அதிலும் குறிப்பாக தற்பொழுது உதயநிதிக்கு வழங்கிய அமைச்சர் பதவி ஆனது துணை முதல்வருக்கு இணையானது என்ற வகையில் பேசினார்.அதவாது இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பதவி என்பது துணை முதல்வர் நிகரானது என்று கூறுகையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் தர கோஷங்களை எழுப்பினர்.

இதன் மூலம் அடுத்த முதல்வர் உதயநிதி தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.இவ்வாறு ஒருவருக்கு பின் ஒருவராக ஸ்டாலின் மற்றும் அவரது மகனை புகழ்ந்து தள்ளினர்.அந்த வகையில் கே என் நேருவும், முதல்வர் ஸ்டாலின் பேரரசர் என்றால் அவரது மகன் அமைச்சர் உதயநிதி சிற்றரசர் என்று பாராட்டினார்.

இவ்வாறு ஒவ்வொரு அமைச்சர்களும் முதல்வர் மற்றும் உதயநிதி குறித்து பேசியதை ஜால்ரா என பல நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.ஆனால் மாற்றி மாற்றி புகழாரம் சூட்டினாலும் அனைவரின் கருத்து ஒன்றாகத்தான் இருந்தது.இது மட்டுமல்ல முதல்வரும் அவரது மகன் அமைச்சர் பதவியை குறித்து பேசுகையில், அவர் செயல்பாடுகள் மூலம் வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருவதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇவ்வாறு  வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்!
Next articleபாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!