ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? 

0
61
#image_title
ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயிலர் திரைப்பட நடிகருக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் நடித்திருந்தார். நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் நடித்திருந்த காட்சிகள் சில நிமிடங்கள் என்றாலும் பலராலும் பரவலாக பேசப்பட்டது.
இதையடுத்து நடிகர் சிவராஜ்குமார் அவர்களின் மனைவி கீதா சிவராஜ்குமார் அவர்கள் ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதே போல நடிகர் சிவராஜ்குமார் அவர்களின் மைத்துனர் பங்காரப்பா அவர்கள் கர்நாடக மாநில கல்வி அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகர். செந்தில்குமார் அவர்களும் அரசியலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் சமீபத்திய சமூக மாநாடு ஒன்றில் “வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் அவர்களை கேட்டுள்ளேன். மேலும் உங்கள் வீடு தேடி வந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் என்றும் கூறினேன்” என துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் கூறினார்.
இது தொடர்பாக பேசிய நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் “என்னுடைய தந்தை எனக்கு கொடுத்த பரிசு நான் நன்கு சிறப்பாக நடித்து உங்கள் மனதில் இடம்பெறுவது தான். அது தான் என்னுடைய எல்லை. நான் உங்களோடு எப்பொழுதும் இருப்பேன். உங்களுக்காக நடிப்பேன்.
அரசியலில் சிறப்பாக வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதை என்னுடைய மனைவி விரும்பவில்லை. மற்றும் என்னுடைய மைத்துனரும் அதை விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.