Udayanidhi: நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி பேசியது சர்ச்சையாகி வருகிறது.
திமுக கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக வும், சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காகவும் இந்து மதத்தினர் பிரச்சினை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். குறிப்பாக பாஜக கட்சியினர் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். கோவை குண்டு வெடிப்பில் 58 அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள்.
காரணமாக இருந்த குற்றவாளி தியாகி போன்று சித்தரித்து அவரது இறப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி இருக்கிறது என்று தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், வங்க தேசத்தில் இந்து மக்கள் மீது நடக்கும் கொடுமைகளை எதிர்த்து பாஜகவினர் சென்னையில் போராட்டம் நடத்தினால் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இந்து மக்களுக்கு துரோகம் இழைத்து இருக்கிறார்கள் எனக் கூறுகிறது.
இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, கோவை மாவட்டத்தில் பெத்தேல் மாநகர பேராலயத்தில், எஸ்.பி.சி., பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார்.
அப்போது, மேடையில் பேசிய அவர், ‘ தான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார். மேலும், இது போன்ற முந்தைய ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் பேசி இருந்தேன் அது பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் “நான் ஒரு கிறிஸ்துவன்” என்று பேசினார். மேலும், இந்து, முஸ்லிம் ,கிறிஸ்தவம் என அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கிறது என்று கூறி இருந்தார்.