ஆளும் கட்சிக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

Photo of author

By Sakthi

ஆளும் கட்சிக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

Sakthi

Updated on:

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தது இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்டோர் திமுகவிற்கு வாக்களித்து இருந்தார்கள்.

அவர்களுடைய வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்திருக்கின்ற தற்போதைய திமுக அரசு அதனை நிறைவேற்றாமல் இருப்பது மனவருத்தத்தை கொடுப்பதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துவிட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, ஓய்வூதிய கார்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு, உள்ளிட்டவற்றை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது அவர்களை துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.