தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன??

0
217
Devar Guru Puja...Modi expresses his wish!! What is the motive behind it??
Devar Guru Puja...Modi expresses his wish!! What is the motive behind it??

தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன??

பிரதமர் நரேந்திர மோடி வரும் முப்பதாம் தேதி தமிழகம் வர உள்ளார். இவர் இதர செயல்பாடுகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்தாலும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இவர் வரும் அந்நாளில் தான்  முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது. பூஜையில் இவர் கலந்து கொள்ள அழைப்பு விட்டதாகவும், அதனை ஏற்று வர இருப்பதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. இவரது பிறந்தநாள் அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல மக்கள் பால்குடம் எடுத்தும் ,அழகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் கொண்டாடுவது வழக்கம்.அந்த வரிசையில் தற்பொழுது பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.இவர் தமிழகத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தான் வருகிறாரா?? அல்லது ஆன்மீகத்தை அதீத அளவில் நிலைநாட்டும் நோக்கில் குரு பூஜையில் கலந்து கொள்கிறாரா என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.

பாஜக என்றாலே ஆர் எஸ் எஸ் என்பது பலருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தமிழகத்தில் இது போன்ற பல நிகழ்ச்சிகள் இருக்கும் பட்சத்தில் இவர் ஏன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது.முத்துராமலிங்க தேவர் சுதந்திரப் போராட்ட தியாகியாக இருந்த போதிலும் ஆன்மீகத்தில் பெரும் ஆதிக்கம் கொண்டிருந்தவர். இவ்வாறு இருக்கையில் பிரதமர் இந்த குரு பூஜையில் கலந்து கொள்வது ஆன்மீகத்தை அங்கீகரித்து, மத வேறுபாடு பார்ப்பது  வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!
Next articleஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!