கொரோனா பரவல் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கியதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆன்லைன் தரிசனம், கவுண்டர்கள் மூலம் ரூபாய் 300 சிறப்பு தரிசனம், அஞ்சலகம், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட அனைத்து சேவைக்கும் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்களை அவர்களே ரத்து செய்தால்,அதற்கான பணத்தை திருப்பி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்படி கேட்கும் பக்தர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் தங்களது டிக்கெட் பணத்தை திருப்பி செலுத்தப்படும் . மேலும் ரத்து செய்ய விரும்பாத பக்தர்கள் , அந்த டிக்கெட்டை வைத்து அவர்கள் விரும்பும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்யலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் 2021-ஆம் ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டைரி மற்றும் காலண்டர் உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தால் தபால் மூலமாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.