இயக்குனர் ராஜகுமாரனுக்காக பார்த்திபனை மிரட்டிய தேவயானியின் தாய்!!

Photo of author

By Gayathri

நடிகை தேவயானியின் கணவர் மற்றும் இயக்குனரான ராஜகுமாரன் தற்பொழுது கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று சுவாரசியமான சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே நடிகை தேவயானியிடம் இந்த படத்தின் கதையை பற்றி சொல்லியிருக்கிறார். சூரியவம்சம் திரைப்படம் முடிந்த பிறகு பார்த்திபன் நடிகர் அஜித் மற்றும் தேவயானி வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் எடுக்க தொடங்கிய பொழுது அதாவது படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே தேவயானியின் அம்மா பார்த்திபனை மிரட்டி இருக்கிறார். பார்த்திபன் நடிகர் மட்டும் இன்றி ஒரு சிறந்த இயக்குனராகவும் சினிமா துறையில் திகழ்ந்து வருபவர். இயக்குனர் என்பதால் இவர் நடிக்கக்கூடிய படங்களிலும் கதைகளில் பல மாற்றங்களை சொல்லிக் கொண்டே இருக்கும் பழக்கம் இவருக்கு உள்ளது.

பார்த்திபனை குறித்து முன்னரே தெரிந்து வைத்திருந்த தேவயானியின் தாயார் அவரை அழைத்து இது நம்ம பையன் படம், எந்த தொந்தரவும் பண்ண கூடாது என்று எச்சரித்து உள்ளாராம்.

ஆனால் அந்த காலகட்டத்தில் தேவயானியின் தாயாருக்கு இயக்குனர் ராஜகுமாரன் தான் தன்னுடைய மருமகனாக வரப்போகிறார் என்பது தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.