ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!! 

Photo of author

By Parthipan K

ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!!

தஞ்சாவூர் மாவட்ட அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது ஆகும். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வின் பொது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவகுமார், உதவி பொறியாளர் கதிரேசன், துணைத்தலைவர் செந்தில்குமார், மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். முன்னதாக நம்ம ஊரு சூப்பர் திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்கள்.

பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தெரிவித்தார்கள். மேலும் துணி பைகளை பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை, கட்டிடம் கட்டும் பணி ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் புதுப்பிக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வும் செய்துள்ளார். அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உள்ளார்.