முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Sakthi

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 .30 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை 2 30 மணி அளவில் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பிறகு அதன் மூலமாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.

இதன் பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது, வரும் தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைப்பூசத் திருநாள் முன்னதாக வருவதன் காரணமாக, 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று இருக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று முதல் 9 நாட்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

சென்ற 7 மாதங்களில் அதிக அளவில் நோய்தொற்று தடுப்பூசி போடப்பட்டதால் முதலமைச்சர் அனைத்து சூழ்நிலையையும், சமாளிக்கும் உறுதியுடன் பக்தர்களும், கோவில் பணியாளர்களும், மகிழ்ச்சியடையும் விதத்தில் சொர்க்கவாசல் திறப்பு அனுமதி வழங்கி இருக்கிறார். ஆகவே ஏற்கனவே இருக்கின்ற நோய்த்தொற்று மற்றும் புதிய வகை நோய் தொற்று பரவும் வேகத்தை பொருத்து மற்ற கோவில் விழாக்களிலும் பக்கதர்கள் அனுமதிப்பது தொடர்பாக எல்லோரும் மகிழ்ச்சியடையும் விதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்று கூறியிருக்கிறார்.