இன்று மதியத்திற்கு மேல் 18 ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

0
193
Devotees are not allowed to climb the 18th step after noon today! Information released by Devasam Board!
Devotees are not allowed to climb the 18th step after noon today! Information released by Devasam Board!

இன்று மதியத்திற்கு மேல் 18 ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

மக்கள் அதிகளவு மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.வருடம் தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த மாதம் மண்டல மகர விளக்கு பூஜைக்காக 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள்.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றபடுகிறது.இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தது.மேலும் நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு திரண்டதால் சபரிமலையில் அதிகளவு கூட்டம் அலைமோதியது.

மேலும் கடந்த சில தினக்களுக்கு முன்பு பம்பை முதல் சன்னிதானம் வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதனால் குழைந்தைகள், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.மண்டல பூஜை நாளை நடக்க இருகின்றது.அதனால் திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973 ஆம் ஆண்டு சபரிமலைக்கு 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜைக்காக வழங்கினார்.

அந்த தங்க அங்கி இன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஊர்வலமானது இன்று மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது.அங்கிருந்து அதிக வரவேற்புடன் தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு  வருவார்கள்.மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் என வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மேலும் 18 ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.பின்னர் 18 படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும்.6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.அதனையடுத்து அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.அதன் பிறகு வழக்கமாக நடைபெறும் பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை மூன்று மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தங்கி அங்கி கொண்டு வருவதையொட்டி இன்று பிற்பகலில் 18 ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30 ஆம் தேதி திறக்கப்படும்.மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி நடைபெறும்.

Previous articleசென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!
Next articleவெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் இதனின் கட்டணம் உயர்வு !!