சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு!!

Photo of author

By Savitha

சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்படுவதை ஒட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

தமிழ் புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் வட பழனி முருகன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேலும் , தமிழ் புத்தாண்டு வழிபாட்டிற்காக வடபழனி N கோவில் காலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளி எழுந்தரு சேவைக்கு பின்னர் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

சுபகிருத வருடத்திலிருந்து சோபக்கிருத புத்தாண்டு பிறந்துள்ள இந்த வேலையில் திருத்தலங்களில் வழிபட்டு ஆண்டை தொடங்கினான் வெற்றியை குவிக்கலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக இருப்பதால் அலுவலகம் செல்லும் நபர்கள் கூட காலையில் வடபழனி முருகனை தரிசித்து விட்டு சென்றனர்.

மற்றும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும் வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் வடபழனி காவல்துறையினர் சார்பில் கோவில் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியானது போடப்பட்டிருந்தது மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவலர்கள் வடபழனி சுற்றியுள்ள தெருக்களை போக்குவரத்தை தடுப்புகள் வைத்து முறைப்படுத்தினர்.